நெல்லையில் பன்றி காய்ச்சல் சோதனை மையம் தயாராகிறது
நெல்லை: நெல்லை மருத்துவ கல்லூரியில் நுண்கிருமியியல் துறை அருகே சுமார் 50 லட்சம் செலவில் பன்றி காய்ச்சல் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தன.
இந்த பரிசோதனை மையத்திற்கு தற்போது ஏசி வசதி, பயோசேப்டிங் கேபிள் மிஷி்ன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணியை தொடர்ந்து ரியல்டைம் பாலிமரைஸ் செயின் ரியாக்ஷன் மெஷின் (ஆர்டிபிசிஆர்) அமைக்கும் பணி நடக்கும்.
இந்த மிஷின் மூலம் தான் நோய் எந்தவகையான தன்மையை சேர்ந்தது என்பதை துல்லியமாக கண்டறிய முடியும். இந்த பணி இம்மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பணி முடிந்து விட்டால் நெல்லை மருத்துவ கல்லூரியில் பன்றி காய்ச்சல் பரிசோதனை மையம் அடுத்த மாதம் செயல்பட வாய்ப்பு உள்ளதாக மருததுவ கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.
பன்றி காய்ச்சல் பரிசோதனை மையம் மூலம் நுண்கிருமி தொடர்பான அனைத்து வகையான நோய்களையும் கண்டறிய முடியும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications