இந்திய மாணவர்களை வரவேற்க மெல்போர்ன் விமான நிலையத்தில் வரவேற்பு மையம்
மெல்போர்ன்: மெல்போர்ன் வி்மான நிலையததில் இந்தியர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களை வரவேற்கும் வகையில் ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விக்டோரியா மாகாண அமைச்சர் பிரான்வின் பைக் கூறுகையில், வெளிநாட்டு மாணவர்களுக்கு இதமான வரவேற்பு கொடுப்பதற்காக மெல்போர்ன் விமான நிலையத்தில், சர்வதேச மாணவர் வரவேற்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய நாட்டில் வந்து செட்டிலாகும்போது நிச்சயம் வெளிநாட்டு மாணவர்களுக்கு உதவி தேவைப்படும் என்பதை நாங்கள் அறிவோம்.
உள்ளூர் தன்னார்வத் தொண்டர்கள் இந்த மையத்தில் இருப்பார்கள். வரவேற்பு பதாகைகளை வைத்துக் கொண்டு இவர்கள் நிற்பார்கள். வருகிற வெளிநாட்டு மாணவர்களுக்கு இங்கு வாழும் முறை, வேலை பார்க்கும் முறை, படிப்பு குறித்த உதவித் தகவல்களை அவர்கள் அளிப்பார்கள்.
வீடு பிடிப்பது, நுகர்வோர் உரிமைகள் குறித்தும் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள், உதவிகள் அளிக்கப்படும் என்றார் பைக்.
இந்தியர்கள் மீதான தொடர் தாக்குதலால் ஆஸ்திரேலியாவின் பெயர் சர்வதேச அளவில் நாறிப் போயுள்ளது. இதனால் அங்கு படிக்க வரும் சர்வதேச மாணவர்கள் குறிப்பாக இந்தியர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.
இதனால் பெரும் இழப்புகளை சந்திக்க நேரிடும் என ஆஸ்திரேலியா அஞ்சுகிறது. இதையடுத்தே இதுபோன்ற நடவடிக்கைகளில் அது இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாரத்திற்கு நான்கு நாட்கள் இந்த வரவேற்பு மையம் செயல்படுமாம்.
இந்த ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் கல்வி ஆண்டு தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications