அமிதாப்பை விட்டு விட்டு ஷாருக்கை மட்டும் விளாசுவது ஏன்? - சிவசேனாவுக்கு ராஜ் தாக்கரே கேள்வி

Subscribe to Oneindia Tamil

Raj Thackeray
மும்பை: ஷாருக்கை மட்டும் கடுமையாக விமர்சித்து வரும் சிவசேனா, அமிதாப் பச்சனை மட்டும் தீண்டாமல் விட்டு வைத்திருப்பது ஏன் என்று கேட்டுள்ளார் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே.

கடந்த சில நாட்களாக ஷாருக் கானை சிவசேனாவினர் பந்தாடி வந்த நிலையில், அதுகுறித்து கருத்துக் கூறாமல் இருந்து வந்தார் ராஜ் தாக்கரே. இப்போது அவரும் களத்தில் குதித்துள்ளார் - ஆனால் அமிதாப்புக்கு எதிராக.

ஷாருக் கான்- சிவசேனா மோதல் குறித்து அவர் கூறுகையில், இந்த கத்தல் தேவையில்லாதது. ஷாருக்கான் ஒரு அறிக்கை விட்டு விட்டார் என்பதற்காக அவரை எதிர்த்து கத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இவர்கள், பாகிஸ்தானியருடன் இணைந்து கவிதை பாடிய அமிதாப் பச்சனைக் கண்டு கொள்ளாமல் விட்டது ஏன். அதைப் பற்றி யாருமே பேச மாட்டேன் என்கிறார்களே.

அதுகுறித்து யாருமே எதுவுமே பேசாமல் இருப்பது ஏன். வசதியாக அதை மறந்து விட்டார்களே என்றார் ராஜ் தாக்கரே.

ஷாருக் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை ஆதரித்து ஏன் பேசினார் என்று தெரியவில்லை. தனது படத்துக்கு விளம்பரம் தேடிக் கொள்ளும் வகையிலா என்றும் புரியவில்லை.

ஒருவேளை அவருக்கு பாகிஸ்தான் வீரர்கள் மீது அக்கறை இருந்திருக்குமானால், ஏன் தனது கொல்கத்தா அணிக்காக அவர் பாகிஸ்தான் வீரர்களைத் தேர்வு செய்யவில்லை? என்று கேட்டுள்ளார் ராஜ் தாக்கரே.

ராஜ் தாக்கரே அறிக்கையைப் பார்க்கும்போது சண்டை போட்டுக் கொண்டிருக்கும் இருவரிடம் போய் அவர்களை விலக்கி விட்டு விட்டு, ''உங்க சண்டையிலே நான் கொடுத்த 1000 ரூபாயை மறந்துராதீங்க'' என்று சொல்வது போல உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+