தமிழகத்தில் மர்ம காய்ச்சல்: ஆலங்குளத்தில் மேலும் ஒரு பலி

Subscribe to Oneindia Tamil

ஆலங்குளம்: ஆலங்குளத்தில் மர்ம காய்ச்சலுக்கு இன்று ஒரு பெண் இறந்தார்.

நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர் மேலப்பாளையம், பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மர்மக்காய்ச்சல் நோய் பரவி 30க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

இந்நிலையில் ஆலங்குளம் அண்ணாநகர் சிஎஸ்ஐ சர்ச் தெருவை சேர்ந்த முருகன் மனைவி மாரி என்பவர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். ஆலங்குளம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை இறந்தார்.

ஆலங்குளம் பகுதியில் உள்ள நெடடூர், ஆலங்குளம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய டாக்டர்கள் இல்லாததால் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.

இதற்கிடையே மர்மக்காய்ச்சலால் அடிக்கடி உயிர்பலி ஏற்படுவதால் இங்குள்ள பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+