அரசு மருத்துவமனையில் பணி: ஆந்திர மருத்துவர்களுக்கு கட்டாயம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: மருத்துவத் துறையில் படிப்பு முடித்தவர்கள் ஒராண்டு காலத்துக்கு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டியதை ஆந்திர அரசு கட்டாயமாக்கி உள்ளது.

இதுகுறித்து ஆந்திர மருத்துவ கல்வி அமைச்சர் சுதர்ஷன் ரெட்டி இன்று ஹைதராபாத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,

'மருத்துவர்கள் அரசு மருத்துவமனையில் பணிபுரிவதை கட்டாயமாக்கும் வகையில் அரசு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, மருத்துவத்தில் முதுகலை மற்றும் பட்டயப் படிப்புகளை முடித்தவர்கள் கட்டாயமாக ஓராண்டு காலத்துக்கு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும்.

இதற்கான அரசாணையில் இதுபற்றிய முழு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதலே இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும்.

பிஜி டிப்ளமோ மற்றும் டிகிரி படிப்புகளை 2012 மற்றும் 2013ம் ஆண்டில் முடிக்கும் மருத்துவர்கள் அரசு அல்லது தனியார் கல்லூரி என எங்கு படித்திருந்தாலும், இதுதொடர்பான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

அரசு மருத்துவமனையில் பணிபுரியும் இந்த மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகையாக முதுகலை பட்டயம் முடித்தவர்களுக்கு ரூ.20 ஆயிரமும், முதுகலை பட்டம் முடித்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.

இந்த ஒப்பந்தத்தை மீறினால் ரூ.15 லட்சம் முதல் 20 லட்சம் வரை அபராதம் செலுத்த நேரிடும்' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+