கோவாவில் மர்ம குண்டுவெடிப்பு: 3 முறை அதிர்ந்தது
Subscribe to Oneindia Tamil
பானாஜி: கோவாவின் தெற்கு கடலோரப் பகுதியில் இன்று மர்மமான முறையில் மூன்று இடங்களில் குண்டுகள் வெடித்த பயங்கர சத்தம் கேட்டதை அடுத்து மாவட்ட நிர்வாகம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
கனகோனா தாலுகாவில் உள்ள கோலோ, அகோண்டோ மற்றும் பலோலெம் ஆகிய கடலோரப் பகுதிகளில் மூன்று முறை பயங்கரமான வெடிச்சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
துணை கலெக்டர் தீபக் தேசாயும் இதை உறுதி செய்தார். போலீசார் மற்றும் நிர்வாகத்தினர் உஷார் படுத்தப்பட்டுள்ளதாகவும், கடலோரப் பாதுகாப்பு படையினர் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் துவக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications