சலுகைகள் கோரி அரவாணிகள் உண்ணாவிரதம்!
நாகை: நாகை மாவட்டத்தில் தங்களுக்கு அரசு சலுகைகளை உடனே வழங்க கோரி அரவாணிகள் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
நாகப்பட்டினம் அவுரி திடலில் அரவாணிகள் மாவட்ட தலைவர் பூமிகா தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் பேசிய பூமிகா, 'தமிழக அரசு அரவாணிகள் நல வாரியம் அமைத்து இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டது.
ஆனால், தங்களுக்கு அரசு அறிவித்த எவ்வித சலுகைகளும் கிடைக்கவில்லை. மாவட்டம் முழுவதும் அரவாணிகள் இருந்தாலும், ஒரு சிலருக்கு மட்டுமே நல வாரியத்தில் பதிவு செய்ய சலுகை காட்டப்படுகிறது.
பதிவு செய்யப்பட்ட 32 அரவாணிகளில் சிலருக்கு மட்டுமே ரேஷன் கார்டு, அடையாள அட்டை வழங்கப்படுவது, அரவாணிகளுக்காக தொண்டு நிறுவனங்கள் அமைத்தும் பயன் இல்லை.
எனவே, அரவாணிகளே தொண்டு நிறுவனம் உருவாக்கிக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும். இவை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து உண்ணாவிரதம் மேற்கொள்கிறோம்' என்றார்.












Click it and Unblock the Notifications