பொன்சேகாவுக்கு நிதியுதவி அளிக்கவில்லை: அமெரிக்கா விளக்கம்!
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலின் போது சரத் பொன்சேகாவுக்கு நிதியுதவி செய்யவில்லை என்று அமெரிக்கா மறுத்துள்ளது.
இதுகுறித்து கொழும்பு நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
'இலங்கை அதிபர் தேர்தலின் போது எதிர்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட்டவரும், முன்னாள் ராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவுக்கு அமெரிக்க நிதி ஆதரவு வழங்கியதாக இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்திருப்பது உண்மைக்கு புறம்பான தகவல்.
தேர்தல் சுதந்திரமாகவும், அமைதியாகவும், ஜனநாயக முறையுடனும் நடக்க வேண்டும் என அமெரிக்க விரும்பியதே தவிர, எந்தவொரு வேட்பாளரையும் அமெரிக்க ஆதரிக்கவில்லை.
தற்போதும் இலங்கையில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்றே அமெரிக்க விரும்புகிறது. அந்தவகையில், தேர்தலில் தோல்வியடைந்த பொன்சேகாவை ஆதரித்தவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என இலங்கை அரசுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுக்கிறது.
மேலும், இலங்கையில் பத்தரிகை சுதந்திரம் உட்பட கருத்து சுதந்திரமும் ஜனநாயக அடிப்படையிலான அரசியல் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என அமெரிக்க வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இலங்கையில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் ஜனநாயக உரிமைகளை பெற்றிருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறோம்' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications