செல்போன் தகராறு: ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட மாணவர்
கொல்கத்தா: செல்போனை சார்ஜ் செய்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் ஓடும் ரயிலிலிருந்து மாணவர் ஒருவர் கீழே தள்ளிவிடப்பட்டார். இதில் அவரது இரு கால்களும் துண்டிக்கப்பட்டன. மேற்கு வங்கத்தில் இந்தச் சம்பவம் நடந்தது.
10ம் வகுப்பு படிக்கும் மாணவரான பிரகாஷ் யாதவ் கடந்த புதன்கிழமை பூர்வா விரைவு ரயிலில் தன்பாத்திலிருந்து ஹெளராவிற்கு பயணம் செய்து கொண்டிருந்தார்.
பனகர் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது 2 இளைஞர்கள் தங்கள் செல்போன்களை சார்ஜ் செய்வதற்காக, ஏற்கெனவே சார்ஜ் செய்து கொண்டிருந்த பிரகாஷின் செல்போனை மின் இணைப்பிலிருந்து எடுக்குமாறு கூறியுள்ளனர்.
இதற்கு பிரகாஷ் மறுப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த இரு இளைஞர்களும் அவரை ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளி விட்டனர்.
இதில் அவரது இரு கால்களும் ரயில் சக்கரத்தில் சிக்கி துண்டிக்கப்பட்டன.
அவரை அப் பகுதியினர் மீட்டு துர்காபூர் மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தள்ளிவிட்ட இரு வாலிபர்களையும் தேடும் பணி நடக்கிறது.












Click it and Unblock the Notifications