சலுகைகளை நிறுத்த வங்கிகள் முடிவு-ஏறப் போகிறது வீட்டுக் கடன் வட்டி
டெல்லி: வீடு மற்றும் கார் கடன்களுக்காக அளித்து வந்து பல்வேறு சலுகைகளை நிறுத்த பொதுத்துறை வங்கிகள் முடிவெடுத்துள்ளன. இதனால் மார்ச் மாதத்திற்குப் பிறகு இந்த வகை கடன்களுக்கான வட்டிகள் மறுபடியும் ஏறப் போகின்றன.
ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் இந்தியா ஆகியவை இந்த முடிவை எடுத்துள்ளன. குறுகிய கால கடன் சலுகை, சலுகை வட்டி உள்ளிட்டவற்றை இந்த வங்கிகள் மார்ச் மாத்திற்கு மேல் நீட்டிக்கப் போவதில்லையாம்.
தற்போது புதிய வாடிக்கையாளர்களுக்கு தொடக்கத்தில் குறைந்த வட்டி விகிதத்தை இவை அமல்படுத்தி வருகின்றன. ஆனால் மார்ச் மாதத்தோடு இவற்றை இந்த வங்கிகள் ஏறக்கட்டி விட தீர்மானித்துள்ளன.
மேலும் சில வங்கிகள் இந்த மாதத்தோடே இவற்றை நிறுத்த தீர்மானித்துள்ளனவாம்.
நாட்டின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் வங்கி தலைவர் ஓ.பி. பட் சமீபத்தில் கூறுகையில், சிறப்பு வீட்டு மற்றும் கார் கடன் வட்டி விகிதங்கள் மார்ச் மாதம் வரை மட்டுமே நீடிக்கும் என்று தெரிவித்திருந்தார்.
ஸ்டேட் வங்கி அதிக அளவிலான 'கடன்காரர்களைப்' பிடிக்கும் வகையில், மை ஹோம் பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. அதன்படி வீடு மற்றும் கார்க் கடன்களை 8 சதவீதத்திற்கு அது கொடுத்து வந்தது.
இந்த திட்டத்தின்படி ரூ. 5 லட்சம் வரை வீட்டுக் கடன்களை வாங்குவோருக்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு (அதிகபட்சம் மொத்தம் 10 ஆண்டுகாலம்) 8 சதவீத வட்டி விதிக்கப்படும்.
5 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரையிலான கடன்களுக்கு முதல் ஆண்டு 8 சதவீத நிலையான வட்டியும், அடுத்த 2 மற்றும் 3வது ஆண்டுகளில் 8.5 சதவீத வட்டியும்
வசூலிக்கப்படும்.
இதுபோன்ற சலுகைகளை பிப்ரவரி மாதத்தோடு நிறுத்திக் கொள்ளப் போவதாக பேங்க் ஆப் இந்தியா செயல் இயக்குநர் நரேந்திரா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications