டோங்கா தீவில் பயங்கர நிலநடுக்கம்

Subscribe to Oneindia Tamil

வெலிங்டன்: தென் பசிபிக் கடலில் நியுசிலாந்துக்கு அருகே உள்ள டோங்கா தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், சுனாமி ஏதும் ஏற்படவில்லை.

தலைநகர் நுகுஅலோபாவுக்கு 100 கிமீ தொலைவில் பூமிக்கு அடியில் 30 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.3 புள்ளிகளாக இது பதிவானது.

இதனால் டோங்காவில் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இந்த நிலநடு்க்காதால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் இல்லை. ஆனால், சுனாமி அலைகள் ஏதும் ஏற்படவில்லை என்று நியூசிலாந்து புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி இங்கு 8.1 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரும் சுனாமி அலைகள் ஏற்பட்டு 189 பேர பலியானது நினைவுகூறத்தக்கது.

டோங்கா நாடு 169 சிறிய தீவுக் கூட்டங்களை உள்ளடக்கியது. 750 கி.மீ சுற்றளவில் இந்த தீவுகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+