தெலுங்கானாவைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏக்கள் பதவி விலகினர்
ஹைதராபாத்: ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கானாவைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
சபாநாயகர் கிரண் குமார் ரெட்டியை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை அவர்கள் கொடுத்தனர்.
இவர்களில் 10 பேர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியைச் சேர்ந்தவர்கள். 2 பேர் காங்கிரஸ், பாஜக, தெலுங்குதேசம், பிரஜா ராஜ்ஜியத்தைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர்.
தனித் தெலுங்கானாவை அமைக்க மத்திய அரசுக்கு நெருக்குதல் தரும் வகையில் இந்த முடிவை எடுத்ததாக 15 பேரும் கூறினர்.
மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாமோதர் ரெட்டி கூறுகையில், நிபந்தனையில்லாத ராஜினாமா கடிதங்களை நாங்கள் கொடுத்துள்ளோம். எங்கள் ஒவ்வொருவரையும் தனித் தனியாக அழைத்து பேசினார் சபாநாயகர். எங்களது ராஜினாமாவை ஏற்க வேண்டும் என அவரை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டோம்.
மற்றவர்களும் இன்று மாலை அல்லது நாளைக்குள் விலகுவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications