புனே குண்டுவெடிப்புக்கு இந்தியன் முஜாஹிதீன் காரணமா?
டெல்லி: இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் கடந்த 2008ம் ஆண்டு குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கமே புனே குண்டுவெடிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்டுள்ள ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது அவை இந்தியன் முஜாஹிதீனின் செயலைப் போலவே இருப்பதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் தனது வலுவான அமைப்பை இந்தியன் முஜாஹிதீன் ஏற்படுத்தியுள்ளதாகவும், புனேவிலேயே ஒரு பிரிவு செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2007ம் ஆண்டு வாரணாசி, பைசாபாத், லக்னோ ஆகிய இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை இந்தியன் முஜாஹிதீன் தான் நடத்தியது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
அதேபோல, ஜெய்ப்பூரில் கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 63 பேரை இந்தியன் முஜாஹிதீன் கொன்றது.
மேலும் அதே ஆண்டில் ஜூலை 26ம் தேதி அகமதாபாத்தில் இந்தியன் முஜாஹிதீன் வைத்த குண்டுகளுக்கு 46 பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications