ஜெ.வுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோகும் - பொன்முடி

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி விரைவில் பறிபோகும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவி்த்துள்ளார்.

விழுப்புரத்தில் மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொன்முடி பேசுகையில்,

தொலைபேசியில் கொடுத்த தகவலை வைத்துக் கொண்டு அ.தி.மு.க. ஆட்சியில் கரும்பு விவசாயிகளின் பாதிப்புகளை புள்ளி விவரத்தோடு துண்டு நோட்டீஸ் அச்சிட்டு குறுகிய காலத்தில் வினியோகித்த பெருமை விழுப்புர மாவட்ட நிர்வாகிகளையே சேரும்.

அ.தி.மு.க -விற்கு எப்படி ஆர்ப்பாட்டம் நடத்த உரிமை உண்டோ, அதே போன்று தி.மு.க -விற்கு துண்டு அறிக்கை வெளியிட உரிமை உண்டு.

ஜெயலலிதா தலைமை தாங்கி நடத்தும் முதல் போராட்டமும், கடைசி போராட்டமும் இது தான். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜெயலலிதா பறவை போல் பறந்து வந்து, மீண்டும் பறந்து சென்றிருக்கிறார்.

ஆனால், 86 வயதிலும் முதல்வர் கருணாநிதி காரில் மட்டுமே பயணம் செய்து மக்களை சந்தித்து வருகின்றார்.

விழுப்புரம் மாவட்டத்திற்கு மார்ச் 7 ம் தேதி முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை தர உள்ளனர்.

அப்போது முதல்வர், துணை முதல்வரை வரவேற்க வைக்கும் பேனர்களில் அவர்களின் படத்தை தவிர மற்றவர்களின் படமோ, பெயரோ போடக் கூடாது. கண்டிப்பாக அரசின் சாதனைகள் அதில் இடம்பெற வேண்டும்.

விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க.,விற்கு மெஜாரிட்டியும் இல்லை, மெச்சூரிட்டியும் இல்லை என்று ஜெயலலிதா பேசி விட்டு சென்றுள்ளார்.

கடந்த 2006 ம் ஆண்டில் அ.தி.மு.க.,விற்கு 61 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். தற்போது அதில் ஆறு பேர் காணமல் போய்விட்டனர்.

விரைவில் ஜெயலலிதாவிற்கு எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவியும் இல்லாமல் போகும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+