புனே குண்டுவெடிப்பு- விரைவாக விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு

புனே குண்டுவெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து இன்று பிரதமர் மன்மோகன் சிங் அவசர ஆய்வுக் கூட்டத்தைக் கூட்டினார். இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கலந்து கொண்டார்.
புனே சம்பவம் குறித்தும், தான் புனே சென்று பார்த்து வந்தது குறித்தும், விசாரணை குறித்தும் பிரதமரிடம், ப.சிதம்பரம் எடுத்துரைத்தார்.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை விரைவாக முடிக்க மத்திய உள்துறையும், மகாராஷ்டிர அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார்.
விசாரணையை விரைவாக முடித்தால்தான் இத்தகைய கொடும் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவாக சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர முடியும் என்றும் பிரதமர் கூறியதாக பிரதமர் அலுவலக செய்தி தெரிவிக்கிறது.
மேலும், புனே தாக்குலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ. 1 லட்சமும் வழங்கவும் பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications