2016ல் அரசியல் புரட்சியை உருவாக்குவேன் - சீமான்

Subscribe to Oneindia Tamil

Seeman
சேலம்: மே 18 ம் தேதி நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் இயக்கமாக அறிவிக்க இருக்கிறேன். அதன் பின்னர் 2016 ல் மாபெரும் அரசியல் புரட்சியை ஏற்படுத்துவேன் என்று கூறியுள்ளார் சீமான்.

ஈழ தமிழர்களுக்காக உயிர் நீத்த முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் சேலம் போஸ் மைதானத்தில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளரும், டைரக்டருமான சீமான் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

அப்போது சீமான் பேசுகையில்,

வரும் மே 18 ம் தேதி நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் இயக்கமாக அறிவிக்க இருக்கிறேன். இதுதான் எனது இலக்கு. இதன் பின்னர் 2016 ல் ஒரு பெரிய அரசியல் புரட்சி ஏற்படுத்தி காட்டுவேன்.

தமிழ் இனத்திற்காக முத்துக்குமார் போன்ற பலர் உயிர் நீத்துள்ளார்கள். நம் நாட்டில் காட்டில் எவ்வளவு புலிகள் உள்ளது என்பதை கணக்கிடுகிறார்கள். மிருகங்களை வதை செய்ய கூடாது என்று கூறுகிறார்கள்.

ஆனால் ஒரு இனமே அழிந்து கொண்டு இருக்கிறது. ஒன்றரை லட்சம் பேரை ராஜபக்சே கொன்று குவித்துள்ளார். உலகம் முழுவதும் நாம் உள்ளோம். உலகம் பெருமைப்பட்டு பார்க்கும் இனமாக தமிழ் இனம் உள்ளது. நம் மொழி, இனம் காப்பதற்காக தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என்றார்.

கூட்டத்தில் சென்னையில் முத்துக்குமார் தீக்குளித்து உயிர்நீத்த சாஸ்திரி பவன் அமைந்துள்ள ஹாரிங்டன் சாலைக்கு முத்துக்குமாரின் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+