பிரேமானந்தா சாமியார் பரோலில் திருச்சி வருகை
திருச்சி: செக்ஸ் சாமியார் பிரேமானந்தா, ஆறு நாள் பரோலில் திருச்சி அருகே அமைந்துள்ள அவரது ஆசிரமத்துக்கு வந்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்துள்ள பாத்திமா நகரில் ஆசிரமம் நடத்தி வந்தவர் பிரேமானந்தா சாமியார். வாயில் இருந்து லிங்கம் எடுத்ததால் பிரபலம் ஆனார்.
இந்த நிலையில், இவரது ஆசிரமத்தில் கற்பழிப்பு மற்றும் கொலை போன்ற சட்ட விரோத செயல்கள் நடைபெற்றதாக புகார் எழுந்தது.
இதனைடுத்து, போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து பிரேமானந்தாவைக் கைது செய்தனர். கோர்ட் விசாரணையில், பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இதனையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது தண்டனை காலத்தை அனுபவித்து வருகிறார்.
இந்த நிலையில் ஆசிரமத்தில் உள்ள இவரின் தங்கை விநாயக சவுந்தரிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாலும், மகா சிவராத்திரியை முன்னிட்டும் ஆறு நாள் பரோலில் பிரேமானந்தா, போலீஸ் பாதுகாப்புடன் அவரது ஆசிரமத்திற்கு வந்துள்ளார்.
இதையடுத்து அங்கு மக்கள் வந்து பிரேமானந்தாவைப் பார்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications