புனே குண்டுவெடிப்பு எதிரொலி: இந்தியா-பாக். பேச்சு நடக்குமா?
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் கூறுகையில், தீவிரவாதத்தால் இந்தியாவை சாய்த்து விட முடியாது. அந்த முயற்சிகளும் பலிக்காது.
புனே குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான அறிக்கை முதலில் வர வேண்டும். அதைப் பரிசீலித்த பிறகுதான் பிப்ரவரி 25ம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர்கள் இடையிலான பேச்சுவார்த்தை குறித்து தீர்மானிக்கப்படும்.
உள்துறை அமைச்சர் புனே வந்துள்ளார். புலனாய்வு அமைப்புகள், பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. விசாரணை அறிக்கைகளைப் பார்த்த பின்னர் முடிவுகள் எடுக்கப்படும் என்றார் கிருஷ்ணா.
புனே குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பாகிஸ்தான் தொடர்புகள் இருப்பதாக தெரிய வந்தால் இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடைபெறாது என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications