செம்மனூர் ஜூவல்லரி.. சூர்யா திறந்து வைத்தார்
பிரபல நகைக்கடை நிறுவனமான செம்மனூர் ஃபேஷன் ஜூவல்லரியின் சென்னைக் கிளையைத் திறந்து வைத்தார் நடிகர் சூர்யா.
கேரளா, மகாராஷ்ட்ரா மற்றும் வளைகுடா நாடுகளில் ஏராளமான கிளைகளைக் கொண்டது செம்மனூர் ஜூவல்ரி. 100 ஆண்டுகள் பாரம்பரிய மி்க்க நிறுவனம் இது.
இப்போது முதல் முறையாக சென்னையில் கிளை திறந்துள்ளது. சென்னை அமைந்தகரையில் உள்ள அம்பா ஸ்கைவாக் மாலில் இந்த கிளை திறக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடிகர் சூர்யா இந்தக் கிளையைத் திறந்து வைத்தார். நடிகர் பிரசன்னாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
துவக்க விழா சலுகையாக ஒரு மாத காலத்துக்கு செய்கூலி சேதாரமில்லாமல், தங்கத்தின் ஒரிஜினல் விலையை மட்டும் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார் இந்நிறுவனத்தின் உரிமையாளர் பாபி செம்மனூர்.
விரைவில் கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட் 6 தமிழக நகரங்களில் செம்மனூர் ஜூவல்லரி கிளைகள் திறக்கப்பட உள்ளதாக பாபி செம்மனூர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications