மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்யலாம்- சு.சாமி
சென்னை: மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் செய்ய முடியும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் செய்ய முடியும். இது நிரூபணமாகியுள்ளது.
எனவே இதைத் தடுக்கும் வகையிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராய தனிக் கமிட்டி ஒன்றை அமைக்கக் கோரி நான் வழக்கு தொடரவுள்ளேன்.
இல்லாவிட்டால் பழையபடி வாக்குச் சீட்டு முறைக்கு மாற உத்தரவிட வேண்டும் என்றும் நான் கோர்ட்டைக் கேட்டுக் கொள்ளப் போகிறேன்.
இதுதொடர்பாக நான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளேன். அது பிப்ரவரி 17ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது இதுதொடர்பாக நான் வாதிடவுள்ளேன்.
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை எந்த நிலையிலும் மோசடியாக பயன்படுத்த முடியும். அதில் திருத்தங்களைச் செய்ய முடியும். இந்த தவறை திருத்திக் கொள்ள போதிய ஏற்பாடுகளைச் செய்யாவிட்டால் மின்னணு எந்திரங்களையே ஒழித்து விட வேண்டும். மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு மாறுவதே நல்லது என்றார் சாமி.












Click it and Unblock the Notifications