நேட்டோ படைகள் அதிரடித் தாக்குதல் - தலிபான்கள் ஓட்டம்

Subscribe to Oneindia Tamil

மர்ஜா (ஆப்கானிஸ்தான்): ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் தலிபான்கள் வலுவுடன் உள்ள ஒரே பெரிய நகரமான மர்ஜாவில் அமெரிக்க, நேட்டோ படையினர் அதிரடித் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர்.

தரை, வான் வழியாக நடத்தப்படும் இந்தத் தாக்குதல் காரணமாக தலிபான்கள் ஓட ஆரம்பித்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. ஆப்கானிஸ்தான் ராணுவத்தினரும் இந்தத் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான அமெரிக்க கடற்படை வீரர்கள், நேட்டோ படையினர், ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் இந்த அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று அதிகாலையில் இந்தத் தாக்குதல் தொடங்கியது. தென் பகுதியில் தலிபான்கள் வலுவாக உள்ள ஒரே நகரமான மர்ஜாவிலிருந்து அவர்களை ஒழிக்கவும், மர்ஜாவை கையகப்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தெற்கு ஆப்கானிஸ்தானுக்கான நேட்டோ படைக் கமாண்டர் மேஜர் ஜெனரல் நிக் கார்ட்டர் கூறுகையில், 60 ஹெலிகாப்டர்களின் உதவியுடன் ஆப்கானிஸ்தான் மற்றும் நேட்டோ கூட்டுப் படையினர் தாக்குதலில் இறங்கினர்.

மர்ஜாவுக்குள் வெற்றிகரமான தாக்குதலை படையினர் மேற்கொண்டனர். எங்கள் தரப்பில் எந்தவித உயிர்ச்சேதமும் இல்லை.

எந்தவித தடையும் இல்லாமல் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நேட்டே படையில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா நாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர் என்றார்.

இந்தத் தாக்குதலில் அமெரிக்கத் தரப்பி்ல் எந்தவித உயிர்ச்சேதமும் இல்லை என்ற போதிலும் தெற்கு ஆப்கானிஸ்தானின் பிற பகுதிகளில் நடந்த தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.

--

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+