பாம்பாறு- நாளை உடுமலையில் வைகோ உண்ணாவிரதம்

இதுகுறித்து ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மாரியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:
அமராவதி அணை மூலம் ஆயக்கட்டு மற்றும் நீரேற்று பாசனம் மூலம் 70 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், 47 குடிநீர் திட்டங்களும், தொழிற்சாலைகளும் பயன்பெற்று வருகிறது.
அமராவதி அணையின் நீர் பிடிப்புப் பகுதியில், முக்கிய நீர் வரத்துள்ள பாம்பாற்றின் குறுக்கே கேரளா அரசு 230 கோடி ரூபாய் செலவில் அணை மற்றும் நீர் மின் நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது.
கேரளா அரசின் இந்த முயற்சியை கை விடக்கோரியும், இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற வேண்டும் என்றும் கோரி உடுமலை பஸ் நிலையம் முன்பு ம.தி.மு.க. சார்பில், மதிமுக பொது செயலாளர் வைகோ தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது.
விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொருளாளர் பாலசுப்ரமணியம் துவக்கி வைக்கிறார். அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளர் ஜெயராமன், பொள்ளாச்சி எம்.பி.சுகுமார், உடுமலை எம்.எல்.ஏ.சண்முகவேலு ஆகியோர் உண்ணாவிரதத்தை முடித்து வைக்கின்றனர்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications