தமிழகத்தில் முத்துக்குமார் பாசறைகள் அமைக்கப்படும்- திருமா.
சென்னை: தமிழகம் முழுவதும் முத்துக்குமார் பாசறைகள் அமைக்கப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
முத்துக்குமாரின் குடும்பத்தினரை நேற்று சந்தித்தார் திருமாவளவன். பின்னர் முத்துக்குமாரின் சகோதரி தமிழரசியிடம் ரூ. 2 லட்சம் குடும்பப் பாதுகாப்பு நிதியை அளித்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஆண்டுதோறும், முத்துக்குமாரின் நினைவு நாளான சனவரி 29ஆம் நாளை தமிழகக் கரும்புலிகள் நாளாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எழுச்சியுடன் கடைப்பிடிக்கும்.
அத்துடன் கரும்புலி முத்துக்குமாருடைய தமிழீழ விடுதலைக்கான அர்ப்பணிப்பை தமிழகத்தில் பரப்பும் வகையில் கரும்புலி முத்துக்குமார் பாசறை என்ற அமைப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தொடங்குகிறோம்.
இந்த அமைப்பு தமிழ்நாடு முழுக்க முத்துக்குமாருடைய கொள்கைகளைப் பரப்பும். கரும்புலி முத்துக்குமாரைத் தொடர்ந்து வீரச்சாவடைந்த தமிழகக் கரும்புலிகள் அனைவரின் குடும்பத்திற்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக பாதுகாப்பு நிதி வழங்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications