கொல்கத்தா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - பீதி
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: சென்னையிலிருந்து கொல்கத்தா சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிளம்பிய தகவலால் பீதி ஏற்பட்டது.
சென்னையிலிருந்து நேற்று ஸ்பைஸ் ஜெட் விமானம் கொல்கத்தா வந்தது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்ததும் அதில் குண்டு இருப்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து விமானத்தை பாதுகாப்புப் படையினர் சூழ்ந்தனர். பின்னர் விமானம் விமான நிலையத்தில் தனியான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு சோதனையிடப்பட்டது. மேலும் பயணிகளின் உடமைகளும், பயணிகளும் சோதனையிடப்பட்டனர்.
இதில் எந்தவித குண்டும் கிடைக்கவில்லை. இதையடுத்து குண்டுத் தகவல் வதந்தி என்று தெரிய வந்தது. இதையடுத்து 177 பயணிகளும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications