கோவையில் நீதிபதி மகன் கல்லூரியில் தூக்கு போட்டு தற்கொலை
கோவை: கோயம்புத்தூரில் நீதிபதி மகன் கல்லூரியில் தூக்கு போட்டு தற்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் சார்பு நீதிபதியாக இருப்பவர் ராமச்சந்திரன். இவரது மகன் சுப்பிரமணியன் (22). இவர் சென்னை அருகே திருப்போரூரில் உள்ள எஸ்.எஸ்.என். இன்ஜினியரிங் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இந்த நிலையில், காதலர் தினம் மற்றும் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பெரும்பாலான மாணவர்கள் தங்கள் உறவினர்கள் வீடு மற்றும் வெளியே சென்று விட்டனர்.
ஆனால், நீதிபதியின் மகன் சுப்பிரமணியன் மட்டும் ரூமில் தனியாக இருந்துள்ளார். விடுமுறை முடித்து கல்லூரி விடுதிக்கு திரும்பிய மாணவர்கள் சுப்பிரமணியம் ரூமின் கதவை தட்டிய போது , வெகுநேரமாக ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் , சந்தேகமடைந்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
பின்பு கல்லூரி நிர்வாகத்தினர் சுப்பிரமணியம் ரூம் கதவை உடைத்து பார்த்த போது சுப்பிரமணியம் தனது அறையில் உள்ள பேனில் தூக்கில் பிணமாக தொங்கினார். இந்த சம்பவம் குறித்து உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்பிரமணி்யனின் பிரேத்தை கைப்பற்றி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் காதல் தோல்வியில் சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications