சென்னை அருகே தமிழக - வட மாநில கல்லூரி மாணவர்கள் பயங்கர மோதல்
சென்னை: சென்னை அருகே எஸ்.ஆர்.எம். கல்லூரியைச் சேர்ந்த தமிழக மாணவர்களுக்கும், வட மாநில மாணவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் மூண்டது. இவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.
சென்னை ராமாபுரத்தில் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் படித்து வரும் தமிழக மாணவர்களுக்கும் வடநாட்டைச்சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் மாணவர்கள் கல்வீச்சில் இறங்கியதால் கல்லூரிப் பொருட்கள் சேதமடைந்தன. கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் அனைவரையும் லத்திகளால் அடித்துக் கலைத்தனர். இந்தத் தடியடியில் பலர் காயமடைந்தனர்.
சென்னையில் உள்ள பல்வேறு தனியார் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் வட மாநிலங்களைச் சேர்ந்த பெரும் பணக்காரர்களின் பிள்ளைகள் பெரும் பணத்தை நன்கொடையாகக் கொடுத்து சேர்ந்து படித்து வருகின்றனர்.
இவர்கள் படிக்கும் வேலையைத் தவிர இதுபோன்ற அடிதடிகளிலும், கோஷ்டி சேர்த்துக் கொண்டு மோதுவதிலும் ஈடுபடுகின்றனர்.
சமீபத்தில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இரு பிரிவாக பிரிந்து கடுமையாக மோதினர். அதில் ஒரு மாணவரை கடத்திச் சென்று காரில் வைத்து அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தமிழக மாணவர்களுடன் வட மாநில மாணவர்கள் மோதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரிகளில் இது போன்ற ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுகக வேண்டும். கல்வி நிலையங்கள் இதுபோன்ற வன்முறைகளுக்கு களமாக மாறி விடக் கூடாது என்று பெற்றோர்கள் விரும்புகின்றனர்.












Click it and Unblock the Notifications