மே. வங்கத்தில் நக்சல்கள் வெறியாட்டம்- 24 போலீஸார் பலி

இவர்கள் அனைவரும் கிழக்கு பிராந்திய ரைபிள் படையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சில்தா முகாமுக்குள் 100க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் நேற்று மாலை புகுந்தனர். மோட்டார் சைக்கிள்கள், நான்கு சக்கர வாகனங்களில் வந்த அவர்கள் கையெறி குண்டுகளையும் பயன்படுத்தினர்.
தாக்குதல் நடந்த சமயத்தில் அந்த முகாமில் 51 போலீஸார் இருந்ததாக தெரிகிறது. அனைவரும் அப்போது ஓய்வாகவும், சமைத்துக் கொண்டும் இருந்ததால் நக்சலைட்டுகளின் திடீர் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்து நிலை குலைந்து போயினர்.
இந்தத் தாக்குதலுக்கு நாங்களே காரணம் என மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ப.சிதம்பரம் மேற்கொண்டுள்ள ஆபரேஷன் கிரீன் ஹன்ட் என்ற பெயரிலான ஆயுத நடவடிக்கைக்கு இதுதான் எங்களது பதில்.
அவர் தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால், நாங்கள் தொடர்ந்து இதே போலத்தான் பதிலளிப்போம் என்றார் கிஷன்ஜி.
மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது மத்தியப் படையினரும், மாநில போலீஸ் படையினரும் இணைந்து மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த வேட்டையை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாகவே போலீஸ் தரப்பில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் வகையில், இந்தத் தாக்குதலை மாவோயிஸ்டுகள் நடத்தியுள்ளனர்.
சம்பவப் பகுதிக்கு கூடுதல் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அருகில் உள்ள வனப் பகுதிக்குள் நக்சலைட்டுகள் தப்பியோடி விட்டனர். அவர்களைப் பிடிக்க படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications