தமிழகத்தில் 30 போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, இடமாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் 30 உயர் போலீஸ் அதிகாரிகள் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் மாலதி நேற்றிரவு இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

சென்னை ரயில்வே ஐ.ஜி சி.வி.ராவ், தமிழ்நாடு ஊர்காவல் படை கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி கே.பி.மகேந்திரன், மாநில குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பொறுப்பேற்க உள்ளார்.

நாகர்கோவிலில் உள்ள மாநில போக்குவரத்துக் கழக அலுவலகத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரியும், ஐ.ஜி.யுமான எஸ்.ஜார்ஜ் கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி டி.கே.ராஜேந்திரன், சென்னை நிர்வாக பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏற்பார்.

சென்னை நவீன மயமாக்கல் பிரிவு ஐ.ஜி. லாலாம்சங்கா கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை நிர்வாக பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ஆர்.சேகர் பயிற்சி பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

மணிப்பூரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை டி.ஐ.ஜி. ராஜீவ்குமார் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். டெல்லியில் உள்ள மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை டி.ஐ.ஜி.யாக இருக்கும் சந்தீப்ராய் ரத்தோர் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. அபய்குமார்சிங் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி நகர கமிஷனராக பொறுப்பு ஏற்பார். சேலம் சரக டி.ஐ.ஜி. வன்னியபெருமாள் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று, திருச்சி நகர கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. துரைராஜ் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று வடக்கு மண்டல ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐ.ஜி. ஆசீஸ்பெங்ரா தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

மேற்கு மண்டல ஐ.ஜி. பிரமோத்குமார் சென்னை நகர தலைமையக கூடுதல் கமிஷனராக பொறுப்பு ஏற்பார். கோவை நகர கமிஷனராக உள்ள பி.சிவனாண்டி மேற்கு மண்டல ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை நகர தலைமையக கூடுதல் கமிஷனராக உள்ள எம்.ரவி சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக பொறுப்பு ஏற்பார். சென்னை நகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக உள்ள ஷகில் அக்தர் சென்னை நகரின் சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை நகர போலீஸ் கமிஷனராக உள்ள குணசீலன் சென்னை ரெயில்வே ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார். திருச்சி நகர கமிஷனராக உள்ள கருணாசாகர் சென்னை நவீன மயமாக்கல் பிரிவு ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.

சென்னை ஊர்காவல்படை ஐ.ஜி.யாக உள்ள மஞ்சு நாதா மாநில குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார். திருச்சி சரக டி.ஐ.ஜி. எம்.ராமசுப்பிரமணி காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக உள்ள பி.கண்ணப்பன் சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சி.பி.சி.ஐ.டி.யாக உள்ள ஜி.வெங்கட்ராமன் சேலம் சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக உள்ள சந்தீப்மிட்டல் மதுரை சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார். தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள டி.ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு சூப்பிரண்டாக உள்ள கே.சங்கர் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமல்ராஜ் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.

தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் சூப்பிரண்டாக உள்ள ஜெயராம் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று ஆயுதப்படைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை அடையாறு துணை கமிஷனர் திருஞானம் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பழனி விசேஷ போலீஸ் படை கமாண்டண்டாக உள்ள ஏ.ஜி.பொன்மாணிக்கவேல் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் சென்னை ரெயில்வே டி.ஐ.ஜி.யாக பதவி ஏற்பார்.

போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வர் மற்றும் சூப்பிரண்டாக உள்ள கே.பி.சண்முகராஜேஸ்வரன் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+