நேருவின் தவறான வெளியுறவுக் கொள்கை: அத்வானி தாக்கு

அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சி குழுமத்தைச் சேர்ந்த சர்வதேச விவகாரங்களுக்கான இதழான நியூஸ்வீக் ஆசிரியர் பரீத் சகாரியா எழுதியுள்ள 'The Post American World', புத்தகத்தை மேற்கோள் காட்டி தனது பிளாக்கில் அத்வானி எழுதியிருப்பதாவது:
1952ம் ஆண்டில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் அளிக்க அமெரிக்கா முன்வந்தபோது, அந்த வாய்ப்பை சீனாவுக்கு அளிக்குமாறு நேரு கூறினார். இதுவே, அவரது தவறான வெளியுறவுக் கொள்கைக்கு சிறந்த உதாரணம்.
ஆனால், நம்பிக்கை துரோகம் இழைத்த சீனா 1962ம் ஆண்டு நம் நாட்டின் மீது படையெடுத்தது. நாட்டுக்கு வலுவான படைத் தளபதி தேவை என மெளன்ட்பேட்டன் வலியுறுத்தியபோது, அதை நேரு நிராகரித்தார்.
மற்ற நாடுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில் மட்டுமே நேரு ஆர்வம் காட்டினார். ராணுவ வலிமையை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபடவேயில்லை.
நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் இல்லாத தவறான கொள்கைகள் நேரு கடைபிடித்தார்.
ஆனால், அவரது மகள் இந்திரா காந்தி வலுவான வெளியுறவுக் கொள்கையைக் கடைபிடித்தார். அவரால் தான் வங்கதேசம் என்ற நாடே உருவானது.
அதே போல நாட்டை அணு ஆயுதங்கள் கொண்ட மாற்றுவதிலும் இந்திராவின் பங்கு மகத்தானது.
ஆனால், பாகிஸ்தான் விஷயத்தில் நேரு கடைபிடித்த தவறான கொள்கைகளுக்கான வலியை இன்றும் காஷ்மீர் அனுபவித்துக் கொண்டுள்ளது. அதே போல தீவிரவாதம் நம்மை இந்த அளவுக்கு காயப்படுத்தவும் நேருவி்ன் தவறான வெளியுறவுக் கொள்கைகளே காரணம் என்று கூறியுள்ளார் அத்வானி.
இந்திய-பாகி்ஸ்தான் வெளியுறவுச் செயலாளர்கள் இடையிலான பேச்சுவார்த்தை வரும் 25ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதை பாஜக எதிர்த்து வருகிறது.
இந் நிலையில் தான் அத்வானி தனது பிளாக்கில் இவ்வாறு எழுதியுள்ளார்.


Click it and Unblock the Notifications
