சென்னையில் மின்சார ரயில் போக்குவரத்து திடீர் ஸ்தம்பிப்பு

தாம்பரத்தில் இருந்து இன்று காலை 9 மணி அளவில் கடற்கரை நோக்கி புறப்பட்ட மின்ரயில் பல்லாவரத்தை கடந்தபோது திடீரென பழுதானது. இன்ஜினில் இருந்து மின் கேபிளுடன் இணைக்கப்படும் சாதனம் பழுதானதாக கூறப்படுகிறது.
பல்லாவரம் மற்றும் திரிசூலத்துக்கு இடைப்பட்ட பகுதியில் ரயில் நின்றுவிட்டது. இதனால் அந்தப் பாதையில் செல்லும் ரயில்களின் சேவை தடைபட்டது.
இதேபோல் கிண்டி அருகே தண்டவாளத்தின் மேல் உள்ள மின்சார கேபிள் இன்று காலை சுமார் 9 மணிக்கு அறுந்து விழுந்தது. இதன் காரணமாக அந்த தடத்திலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
இதனால் நடுவழியில் வந்துகொண்டிருந்த ரயில்கள் அந்தந்த நிலையங்களிலேயே நிறுத்தப்பட்டன. இரு பாதைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் காலையில் குறித்த நேரத்தில் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அலுவலர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் என பல தரப்பினரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் கழிந்த பின்னரே இந்த கோளாறுகள் சரிசெய்யப்பட்டன. 10.30 மணிக்கு பின் ரயில் போக்குவரத்து சகஜமானது.












Click it and Unblock the Notifications