'கடவுள் கண் திறந்து விட்டார்': புளியங்குடி அருகே பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: அய்யனார் கோயிலில் கடவுள் சிலைகள் தானாக கண் திறந்து பார்ப்பதாக பரவிய தகவலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடவுளின் பார்வைக்காக ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் கோயிலில் திரண்டனர்.

நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள பாம்புகோயில் சந்தை சாலையில் கற்குவேல் அய்யனார் கோயில் உள்ளது.

சிவராத்திரி பூஜைகளுக்காக கடந்த இரு தினங்களுக்கு முன்பு இங்குள்ள சாமி சிலைகளுக்கு சந்தனக்காப்பு உள்ளிட்டவை செய்யப்பட்டன.

நாட்கள் கழிந்த நிலையில், சிலை மீதிருந்த சந்தனம் நிறம் மாறி காட்சியளிப்பது. சிலையின் கண் பகுதியில் தத்ரூபமாக இந்த நிறம் மாறியதால், கண்கள் திறந்திருப்பது போன்று தோற்றமளித்தது.

இதைப்பார்த்த சிலர் உணர்ச்சிவசப்பட்டும், உண்மையை திரித்தும், சாமி கண் திறந்து விட்டதாக ஊர் மக்களிடம் கூறி வதந்தியை கிளப்பினர்.

இதனால் ஏராளமான மக்கள் கோயிலுக்குள் திரண்டு சாமி கண் திறந்திருப்பதை பார்க்க அலைமோதினர். கூட்டம் அதிகமானதால், போலீசார் வந்து பக்தர்களை கட்டுப்படுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+