தமிழீழ கனவு இன்னும் கலையாமல் அப்படியே உள்ளது - இலங்கை ராணுவத் தளபதி

Subscribe to Oneindia Tamil

Jagath Jayasooriya
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்க முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டு விட்ட போதிலும், தமிழீழ கனவு மட்டும் இன்னும் அப்படியேதான் உள்ளது என்று இலங்கை ராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா கூறியுள்ளார்.

ஜெயசூர்யா, இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள கல்லடி, தொப்பிகல, வாகரை, புனானை ராணுவ முகாம்களுக்கு பயணம் செய்து ராணுவ வீரர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்களும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களும் இன்னமும் தமிழீழம் குறித்து விவாதித்து வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு, மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்ட போதிலும், தமிழீழம் குறித்த அவர்களது கனவு கலையவில்லை.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தற்போது கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காகவே ராணுவ வீரர்கள் பெருமளவில் நிறுத்தப்பட்டுள்ளனர். போரிடுவதற்காக அல்ல. நமது நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பு ராணுவத்துக்கு உள்ளது.

ஏதாவது ஒரு குழுவினர் மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராடத் துணிந்தால், அதையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஜெயசூர்யா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+