கோவை, திருச்சி, மதுரையில் மீன் மொத்த விற்பனை நிலையம்
தூத்துக்குடி: கோவை, திருச்சி, மதுரையில் மீன் மொத்த விற்பனை நிலையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு மீன்வளர்ச்சிக்கழக பொதுமேலாளர் மோகன சுந்தரம் தெரிவித்தார்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில், மீன் குளிர்பதன அறை செயல்பாடு குறித்து, எம்எல்ஏ யசோதா தலைமையிலான சட்டசபை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு செய்தது.
அப்போது, மீன் வளர்ச்சி கழகத்தின் செயல்பாடுகள் குறித்து பொது மேலாளர் மோகன சுந்தரம் பேசுகையில்,
'மத்திய அரசின் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்திலிருந்து, தமிழ்நாடு மீன்வளர்ச்சிக்கழகம் மூலம் இந்தியாவில் முதன்முறையாக ரூ.2.80 கோடி செலவில் கோவையில், நவீன மீன் மொத்த விற்பனை நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இதன் அடுத்த கட்டமாக திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் மீன் மொத்த விற்பனை நிலையம் அமைக்கப்படும்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி, பழையாறு, நாகப்பட்டணம், ராமேஸ்வரத்தில் தலா 15 லட்ச ரூபாய் செலவில் மீன் மொத்த விற்பனை நிலையம் அமைக்கப்பட உள்ளது' என்றார்.












Click it and Unblock the Notifications