உணவு தானிய உற்பத்தி 7.51% குறைய வாய்ப்பு!

Subscribe to Oneindia Tamil

Food Grain
டெல்லி: நடப்பு 2009-10ம் ஆண்டில் இந்தியாவில் உணவு தானிய உற்பத்தி 7.51 சதவீதம் அளவுக்கு சரிவடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு கோடை காலத்தில், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வறட்சி நிலவியதால் இந்த பாதிப்பு ஏற்படவுள்ளது.

கடந்த 2008-09ம் ஆண்டு உணவு தானிய உற்பத்தி 23.45 கோடி டன்னாக இருந்தது. இது, நடப்பு ஆண்டில் 21.69 கோடி டன்னாக குறைய வாய்ப்புள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள உணவு தானியங்கள் உற்பத்தி குறித்த இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீட்டில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாதத்துடன் நிறைவடையும் கரீஃப் பருவத்திலும், அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதத்தில் நிறைவடையும் ரபி பருவத்திலும் (குளிர் காலம்) உணவு தானிய உற்பத்தி குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் நெல், கரும்பு போன்றவை கரீஃப் பருவத்தில் (கோடை காலம்) பயிரிடப்படுபவை. இதில் நெல் உற்பத்தி நடப்பு ஆண்டில் 11.71 சதவீதம் குறைந்து 8.76 கோடி டன்னாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதே போல கரும்பு உற்பத்தி 28.50 கோடி டன்னிலிருந்து 25.12 கோடி டன்னாக குறையும்.

எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி 2.77 கோடி டன்னிலிருந்து 2.63 கோடி டன்னாக குறையும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

அதே நேர்தில் பருப்பு வகைகளின் உற்பத்தி 1.46 கோடி டன்னிலிருந்து 1.47 கோடி டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பருவநிலை சாதகமாக அமைந்தால் உணவு தானியங்களின் உற்பத்தி, தற்போதைய மதிப்பீட்டைவிட அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்க�பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+