மதுகோடா ஊழல்: நாடு முழுவதும் 60 இடங்களில் 'ரெய்ட்'

வருமானத்துக்கு அதிகமாக ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல்கள் செய்து சொத்து சேர்த்ததாக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததில், சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடான முதலீடுகள் மற்றும் ஹவாலா பணப் பரிமாற்றம் ஆகியவற்றுக்கான ஆதாரங்கள் கிடைத்ததாக கூறினர்.
இதுகுறித்து மதுகோடாவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் ராஞ்சியில் மதுகோடாவின் உதவியாளர் எம்.எல். பாலின் வீடு உட்பட பல்வேறு இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை தொடங்கியுள்ளனர்.
மதுகோடா வழக்கு தொடர்பாக நாடு முழுவதும் உள்ள 60 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக வருமான வரித்துறை இயக்குனர் உஜ்வால் சௌத்ரி கூறினார்.
எனினும் சோதனைகள் நடக்கும் இடங்கள், யார் யார் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பது போன்ற தகவல்களை அதிகாரிகள் வெளியிட மறுத்துவிட்டனர்.
மதுகோடாவின் உதவியாளரின் ராஞ்சி வீடு உட்பட பாட்னா, சாய்பாசா மற்றும் ஜெம்ஷெட்பூர் ஆகிய இடங்களில் தற்போது சோதனைகள் நடந்து வருவதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications