ஜேபிஜே அதிபரின் மனைவி பெல்லா ஜஸ்டின் கைது
சென்னை: ஜேபிஜே நிறுவன உரிமையாளர் ஜஸ்டின் தேவதாஸின் மனைவி பெல்லா ஜஸ்டின் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
சென்னையைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜேபிஜே, வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு போலி ஆவணங்கள் மூலம் நிலம் விற்று மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து ஜேபிஜே அதிபர் ஜஸ்டின் தேவதாஸை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நிறுவனத்துக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
நிறுவன நிர்வாகத்தில் தொடர்புடைய ஜஸ்டின் தேவதாஸின் மனைவி பெல்லா ஜஸ்டின் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் சென்னை மதுரவாயல் அமுதம் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெல்லா ஜஸ்டின் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அங்கு சென்ற போலீசார் பெல்லா ஜஸ்டினை கைது செய்தனர். அவரிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications