பெண் பேராசிரியரை கொலை-தற்கொலைக்கு முயன்ற கொலையாளி காதலன்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோயில்: கன்னியாகுமரி அருகே கல்லூரி ஆசிரியை வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், அவரை ஒருதலையாகக் காதலித்த வாலிபர், அவரை படுகொலை செய்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அகுமனை அருகே உள்ள சிதறால் சந்திப்பு பகுதியைச் சேர்ந்த நேசையா தாஸின் மகள் ஷர்மின் (24).

இவர் நாவல்காடு அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்த்து வந்தார்.

இவரும் அதே பகுதியில் உள்ள வாங்கவிலையை சேர்ந்த ஷாஜின் என்பவரும் காதலித்து வந்தனர். இதற்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது.

தொடர்ந்து ஷர்மினுக்கு கல்லூரி வேலை கிடைத்ததால் ஷாஜினுடனான தொடர்பு தடைப்பட்டதாக கூறப்படுகிறது. இந் நிலையில் ஷர்மின் வீட்டுக்கு சென்று அந்த வாலிபர் பெண் கேட்டார். இதற்கு பெண்ணின் தாயார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தொடர்ந்து பலர் மூலம் பெண் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இந் நிலையில் இரு நாட்களுக்கு முன் ஷர்மினை பெண் பார்க்க களியக்காவிளையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வந்தனர். அவர்களுக்கு ஷர்மினை பிடித்துப் போகவே நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தனர்.

இதையறிந்த ஷாஜின் ஆத்திரம் அடைந்தார். இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஷர்மினின் தாயார் பால் வாங்க வெளியே சென்றுதிருந்தபோது வீட்டுக்குள் புகுந்த ஷாஜீன், தூங்கிக் கொண்டிருந்த ஷர்மினை சரமரியாக அரிவாளால் வெட்டினார்.

இதில் ஷர்மினின் தலை தனியே துண்டாகிவிட்டது.

வெளியே சென்ற தாயார் கனகம் திரும்பி வந்து மகள் கோரமாக படுகொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு கதறினார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் திரண்டு சாஜனை துரத்தினர். ஆனால், அவர் தப்பியோடிவிட்டார்.

இந் நிலையில் இன்று காலை நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் ரயில் இரணியல்-குழித்துறை ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது ஷாஜின் ரயிலின் குறுக்கே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

ஆனால், ரயில் மோதியதில் தூக்கி வீச்ப்பட்ட அவர் பலத்த காயங்களுடன் தப்பிவிட்டார். இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு ஆபத்தான நிலையில் சிகிக்சை பெற்று வருகிறார் ஷாஜின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+