ஆந்திராவைப் பிரிப்பதற்கு ஜெயேந்திரர் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
குண்டூர்: ஆந்திராவைப் பிரித்தால் அது மிகப் பெரிய அழிவுக்கே வித்திடும். மாவோயிஸ்டுகள் சுதந்திரம் பெற்று நாட்டுக்கும் அது பேராபத்தை ஏற்படுத்தி விடும் என்று
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் குண்டூருக்கு 3 நாள் பயணமாக ஜெயேந்திரர் வந்துள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஆந்திராவைப் பிரிப்பது பேரழிவுக்கே வித்திடும். மாநிலத்தைப் பிரித்தால் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பலமடைந்து விடுவர்.
இங்கு அனைவருமே தெலுங்கு மொழியைத்தான் தாய் மொழியாகக் கொண்டுள்ளனர். எனவே இந்த மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
நாட்டின் ஒற்றுமையைக் காக்க அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். மொழி, பிராந்திய அடிப்படையில் துவேஷங்கள் வளர விடக் கூடாது என்றார் ஜெயேந்திரர்.












Click it and Unblock the Notifications