இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜகார்தா: இந்தோனேசியாவின் கிழக்கு தீவுப் பகுதிகளில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.2 என பதிவானது.
தானிபார் தீவுகளுக்கு மேற்கே 295 கி.மீ தொலைவு மற்றும் கிழக்கு திமோர் தலைநகர் தீலீக்கு கிழக்கே 383 கி.மீ தொலைவை மையமாகக் கொண்டு, இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.21 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத் தகவல் தெரிவிக்கிறது.
எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. பூகம்பத்தால் ஏற்பட்ட சேதாரங்கள் குறித்தும் உடனடி தகவல் இல்லை.












Click it and Unblock the Notifications