மதுரையில் போலீஸ் எண்கெளன்டரில் 2 ரெளடிகள் பலி
மதுரை: மதுரை தெப்பகுளத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரு ரெளடிகள் கொல்லப்பட்டனர்.
மதுரை அருகே உள்ள உசிலம்பட்டியைச் சேர்ந்த கலியரசு, மதுரை செல்லூரைச் கல்லுமண்டையன் ஆகிய இருவர் மீதும் பல கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உள்ளன.
இவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வந்தது.
இந் நிலையில் இருவரும் இன்று காலை தெப்பகுளம் அருகே பதுங்கியிருப்பதாக தகவல் வரவே இந்தப் படை இங்கு விரைந்தது.
அவர்களை தனிப்படை போலீசார் பிடிக்க முயன்றபோது இருவரும் பட்டாக் கத்திகளால் போலீசாரைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றனர். இதில் எஸ்ஐ உள்பட 3 போலீசார் காயமடைந்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்த இருவரும் பலியாயினர்.
தெப்பக்குளம் அருகே மிகவும் பரபரப்பான ஜன நெருக்கடி மிக்க சாலையில் பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூரில் 2 பேர் வெட்டிக் கொலை:
இந் நிலையில் ஓசூரில் இருவர் நடிரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஒசூர் முத்துராயன் வீதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகேசன் (32). அவரது நண்பர் அசோக் (25).
இருவரும் இன்று காலை கங்காதரன் என்பவருடன் ஒரு மருத்துவமனையின் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தபோது ஒரு கும்பல் காரில் வந்திறங்கி மூவரையும் வெட்டித் தள்ளியது.
இதில் முருகேசன், அசோக் இருவரும் அங்கேயே பிணமாயினர். படுகாயமடைந்த கங்காதரன் ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதில் கங்காதரன் கடந்த ஆண்டு ஓசூரில் வெட்டி கொலை செய்யப்பட்ட தே.மு.தி.க. பிரமுகர் அம்மன் பாலாஜி கொலை வழக்கில் 3வது குற்றவாளியாவார்.
அவரை பழிக்குப் பழியாக கொலை செய்யவே இன்று இந்தக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால், இந்தத் தாக்குதலில் அவருடன் இருந்த அவரது இரு நண்பர்கள் பலியாகிவிட்டனர்.












Click it and Unblock the Notifications