ரூ.36 கோடி மோசடி: பொன்சேகா மருமகனுக்கு எதிராக கைதுவாரன்ட்!

இலங்கை ராணுவத் தளபதியாக பொன்சேகா பதவி வகித்த சமயத்தி்ல் ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள் மற்றும் உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கு பல்வேறு நிறுவனங்கள் உடனான ஒப்பந்தங்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் பொன்சேகாவுக்கு இருந்தது.
அதைப் பயன்படுத்தி பொன்சேகாவின் மருமகனான திலகரத்னவுக்கு சொந்தமான ஹைகார்ப் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு முறைகேடாக ஒப்பந்தங்களை பொன்சேகா வழங்கியுள்ளார் என்று புலனாய்வுத் துறை கண்டுபிடித்துள்ளது.
மேலும் பல்வேறு பெயர்களில், வெவ்வேறு நாடுகளில் திலகரத்ன நடத்தும் நிறுவனங்களிடம் இருந்தும் கொள்முதல் செய்ய பொன்சேகா ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இவையெல்லாம் தனிநபர் ஆதாயத்துக்காக, வேண்டுமென்றே திட்டமிட்டு செய்தது மட்டுமின்றி ராணுவத் தளவாட கொள்முதல் நடைமுறைகள் முற்றிலும் மீறப்பட்டுள்ளதாக புலனாய்வுத் துறை கண்டுபிடித்துக் கூறியுள்ளது.
இவ்வாறாக ரூ.36 கோடிக்கும் மேல் பொன்சேகா மருமகன் வருமானம் ஈட்டியிருப்பது தெரியவந்தது. அதில் ஒரு பகுதி பணத்தை தனது தாய் பெயரில் இலங்கையில் உள்ள தனியார் வங்கியில் மூதலீடு செய்திருப்பதாகவும், மீதிப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இவ்வழக்கில் பொன்சேகா மருமகன் திலகரத்னேவை கைது செய்ய கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்துள்ளது.
பொன்சேகா விடுதலைக்காக கையெழுத்து இயக்கம்:
இந் நிலையில் கைது செய்யப்பட்டுள்ள பொன்சேகாவை விடுதலை செய்ய வலியுறுத்தி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து வேட்டையை இலங்கையில் எதிர்க்கட்சிகள் துவக்கியுள்ளன.
இன்று காலை கொழும்பு நகரில் உள்ள ஜெயவர்த்தனபுரா மையத்தில் கையெழுத்து இயக்கும் தொடங்கி மும்முரமாக நடந்து வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திசா அட்டாநாயகே தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications