எய்ட்ஸ் பாதித்த காதலனை கொன்ற ஓரின சேர்க்கையாளர்!

Subscribe to Oneindia Tamil

Ray Gosling
லண்டன்: எய்ட்ஸ் பாதித்த காதலனை, தலையணையால் அமுக்கி கொலை செய்த பிபிசி நிகழ்ச்சி தொகுப்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிபிசி தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்தவர் ராய் கோஸ்லிங் (70). பிரிட்டனைச் சேர்ந்த இவர் ஓரினச் சேர்க்கையாளர்.

கடந்த திங்கள் கிழமையன்று பிபிசி நிகழ்ச்சி ஒன்றின் மூலம், தனது ஓரினச் சேர்க்கை காதலனை தானே கருணைக் கொலை செய்ததாக இவர் கூறினார்.

காதலன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டதாகவும், சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாததால், கருணை கொலை என்ற பெயரில் மருத்துவமனையிலேயே காதலனை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

அவர் கூறுகையில், 'நோய் படுக்கையில் இருந்த காதலனை மருத்துவர்கள் காப்பாற்ற வாய்ப்பே இல்லை என்றனர். சட்டென்று ஒரு தலையணையை எடுத்த நான், காதலின் முகத்தில் வைத்து அழுத்தினேன்.

சில வினாடிகளில் அவனின் உயிர் பிரிந்துவிட்டது. இது நான் அவனுக்கு செய்த பெரிய உதவி. அவனைப் பிரிந்து நான் துயரம் அடைந்திருக்கிறேன். இதை நான் தாங்கிக்கொள்வேன். ஆனால் நோய் பாதிப்பை அவன் எத்தனை நாள் தாங்குவது' என்றார்.

இத்தகவல் வெளியானதை அடுத்து போலீசார் நேற்று கோஸ்லிங்கை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+