கசாப் யாரென்றே தெரியாது, பார்த்ததும் கிடையாது - லஷ்கர் தலைவர் சயீத்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அரபு தொலைக்காட்சி ஒன்றுக்கு சயீத் அளித்துள்ள பேட்டியில்,
அஜ்மலை நான் பார்த்ததே இல்லை. பத்திரிகைகள் தான் என்னையும் அஜ்மலையும் இணைத்து செய்தி வெளியிடுகின்றன. அஜ்மலை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்று பல முறை சொல்லி விட்டேன். ஆனால் உண்மையை மறைத்து ஆதாரமற்ற தகவல்களை பரப்பி கொண்டிருக்கின்றனர். இதற்கு நான் பலிகடாவாகியுள்ளேன்.
காஷ்மீர் பிரச்சினை பற்றி வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்போதுதான் அதற்கு தீர்வு ஏற்படும். ஆனால் இந்தியாவுக்கு வெளிப்படையான பேச்சு நடத்த ஆர்வம் இல்லை. காஷ்மீர் பிரச்சினை முக்கியமான ஒன்று என்பதை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றான் சயீத்.












Click it and Unblock the Notifications