முல்லைப் பெரியாறு விவகாரம்: நீதிபதி ஆனந்த் தலைமையில் ஆய்வு குழு அமைப்பு

Subscribe to Oneindia Tamil

AS Anand
டெல்லி: முல்லை பெரியாறு அணை உறுதியாக இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு நடத்த முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஆய்வு நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் நேற்று அறிவித்திருந்தது.

இந் நிலையில் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் இந்தக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.

இதில் மத்திய அரசை சேர்ந்த 2 நிபுணர்களும், தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்த தலா ஒரு நிபுணர்களும் இந்த குழுவில் இடம் பெறுவர்.

இந்தக் குழு ஆய்வு நடத்தி 6 மாதத்துக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் கேரள அரசுகள் சார்பில் நியமிக்கப்படும் ஒரு உறுப்பினர் ஓய்வு பெற்ற நீதிபதியாகவோ அல்லது தொழில்நுட்ப வல்லுனராகவோ இருக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+