பிரதமருடன் ஒபாமா பேச்சு: புனே குண்டுவெடிப்புக்கு கண்டனம்

அப்போது புனே குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தனது கண்டனத்தையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலையும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
'அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் இன்று தொலைபேசியில் உரையாடினர். முதலில் புனேயில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு ஒபாமா தனது கண்டனத்தை வெளிப்படுத்தினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது இரங்கலையும், ஆறுதலையும் பிரதமரிடம் ஒபாமா தெரிவித்தார். புனே குண்டுவெடிப்பு தொடர்பாக எஃப்பிஐ உதவி தேவைப்பட்டால் இந்தியாவுக்கு வழங்க தயாராக இருப்பதாக ஒபாமா தெரிவித்தார்.
இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்க இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து போராட வேண்டும் என்றும் ஒபாமா வலியுறுத்தினார்.
மேலும் இரு தலைவர்களும் இந்திய-அமெரிக்க உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதித்தனர் என்று கூறப்பட்டுள்ளது.
ஒபாமாவுக்கு மக்கள் செல்வாக்கு சரிகிறது:
சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு அதன் தாக்கம் அமெரிக்காவை புரட்டிப் போட்டிருந்த சமயத்தில் அதிபரானார் ஒபாமா.
மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற தாரக மந்திரத்தை முழங்கிய அவரை அமெரிக்க மக்கள் நம்பிக்கையுடன் உற்சாகமாக அதிகாரத்தில் அமர்த்தினர்.
அதிபராக ஒரு வருடத்தை தாண்டி விட்ட நிலையில், ஒபாமாவின் மக்கள் செல்வாக்கு குறித்து சிஎன்எஸ் டிவி நிறுவனம் ஒரு கருத்து கணிப்பு நடத்தியது.
வரும் 2012ம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலிலும் ஒபாமாவை ஆதரிப்பீர்களா? என்று அவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்தவர்களில் 52 சதவீதம் பேர் ஒபாமா அதிபராக ஆதரவு கொடுக்க மாட்டோம் என்றனர். 44 சதவீதம் பேர் மட்டும் அவரை ஆதரிப்போம் என்றனர்.
ஆனால் ஒபாமாவின் ஒட்டு மொத்த பணிகள் நன்றாக இருப்பதாக 47.8 சதவீதத்தினரும், சரி இல்லை என்று 45.9 சதவீதத்தினரும் கூறியுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications