பாகிஸ்தானில் மசூதியில் குண்டுவெடிப்பு- 20 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பகுதியில் மசூதியில் குண்டுவெடித்தது. இதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
அல் கொய்தா, தலிபான்களுக்கு எதிரான தீவிரத் தாக்குதலில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானில் இறங்கியுள்ளனர்.
அதேபோல பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப்புற மாகாணத்தில் தலிபான்களை வேட்டையாடி வருகிறது பாகிஸ்தான் ராணுவம்.
இந்த நிலையில், கைபர் பகுதியில் உள்ள அப்பர்திரா பள்ளத்தாக்கில் உள்ள தார்ஸ் கிராமத்தில் உள்ள ஒரு மசூதியில் குண்டு வெடித்தது.
இந்த குண்டுவெடிப்பில் 20 பேர் பலியானார்கள். 20 பேர் காயம் அடைந்தனர்.
குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த மசூதியில் அதை சுற்றியுள்ள பகுதியிலும் 100-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
கைபர் பகுதியில் லஷ்கர்-இ-இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்பு தலிபான் தீவிரவாதிகளுடன் சேர்ந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்த சம்பவத்தில் லஷ்கர்-இ-இஸ்லாம் அமைப்பின் துணை தலைவர் அசாம்கான் உயிரிழந்தார். எனவே, அந்த இயக்கத்தினர் தற்கொலை தாக்குதல் நடத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications