தியாகி சுப்பிரமணிய சிவாவுக்கு ரூ. 40 லட்சத்தில் மணிமண்டபம்- கருணாநிதி உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தியாகி சுப்பிரமணிய சிவாவுக்கு ரூ. 40 லட்சம் செலவில் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் மணிமண்டபம் அமைக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்தியில்,
நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தீவிர ஈடுபாடு கொண்டதால் சுப்பிரமணி சிவாவை வெள்ளையர் ஆட்சி கைது செய்து சிறையில் அடைத்தது.
அந்த சிறையில் தூய்மையற்ற சூழ்நிலையால் கொடிய நோய்க்கு ஆளான போதிலும், சுதந்திர வேட்கையை இறுதிநாள் வரை கைவிடாமல் அவர் வாழ்ந்து மறைந்தார்.
அவர் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டியில் 40 லட்ச ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications