இன்று உவேசா பிறந்த நாள்: தமிழக அமைச்சர்கள் மரியாதை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்த் தாத்தா என்றழைக்கப்படும் உ.வே.சாமிநாத அய்யரின் 156வது பிறந்த நாள் இன்று பல்வேறு இடங்களிலும் கொண்டாடப்பட்டது.
சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த திருவுருப்படத்திற்கு அமைச்சர் அன்பழகன், அமைச்சர் பரிதி இளம்வழுதி, மற்றும் தமிழறிஞர்கள் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
ஓலைச்சுவடி வடிவிலும், கையெழுத்தேடு வடிவங்களிலும் இருந்த பழங்கால நூல்கள் அச்சில் ஏறுவதற்கு காரணமாக இருந்தவர் உ.வே.சா. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, நெடுநல்வாடை என பல பழம்பொக்கிஷங்களும் அழியாமல் பாதுகாத்த பெருமை அவருக்குண்டு.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்கு முழு நேர தொண்டாற்றிய இவரின் 156வது பிறந்த நாளை மக்கள் இன்று கொண்டாடுகின்றனர். .












Click it and Unblock the Notifications