உயர்நீதிமன்ற வக்கீல்-போலீஸ் மோதல் தினம்: வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வக்கீல்கள் - போலீஸ் மோதல் சம்பவம் நடந்து ஒரு வருடம் ஆகியுள்ளதைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பி்ல் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் நடந்து ஓராண்டாகியும் தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பெண் வழக்கறிஞர்கள் கருப்பு பேட்ஜ் அணித்து புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் போராட்டங்கள், பேரணி, உண்ணாவிரதம் என பல வகைகளில் வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தியும், வருத்தமும் வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications