முல்லைப் பெரியாறு: தமிழகம் ஏமாறவும் இல்லை, கேரளாவுக்கு விட்டுக் கொடுக்கவுமில்லை - கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: முல்லைப் பெரியாறு அணை வழக்கில் தமிழக அரசு யாரிடமும் ஏமாறவும் இல்லை. கேரளாவுக்கு எதையும் விட்டுக் கொடுக்கவும் இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் பாணி அறிக்கை:

கேள்வி: உங்களுக்கு முன்னர் இருந்த பழைய ஆட்சியாளர்கள் அறிவித்த சில திட்டங்களை நிறைவேற்றுவது அடுத்து வருகின்ற ஆட்சியாளர்களின் கடமை அல்லவா? அதன்படி எம்ஜிஆர் ஆட்சியிலே இருந்தபோது மதுரையில் நடத்திய உலகத் தமிழ் மாநாட்டில், உலகத் தமிழ்ச் சங்கக் கட்டிடம் கட்டப்படும் என்று அறிவித்தாரே இந்த அரசில் அதற்கான திட்டம் ஏதாவது இருக்கிறதா?

கருணாநிதி: திமுக ஆட்சியில் டாக்டர் ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட சீராய்வுக்குழு இது தொடர்பாக பரிந்துரை அளித்திருக்கின்றது. அந்தப் பரிந்துரையை இந்த அரசு பரிசீலித்து மதுரையிலே உலகத் தமிழ்ச் சங்க மாளிகை கட்டுவதற்கான நடவடிக்கையில் நிச்சயம் ஈடுபடும்.

கே: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்து உச்சநீதிமன்றம் 5 பேர் குழுவினை அறிவித்திருக்கிறதே? அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

கருணாநிதி: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை சம்மந்தமான வழக்கில் குறிப்பாக கேரள அரசு நிறைவேற்றிய கேரள நீர்ப்பாசனம் மற்றும் நீர்சேமிப்பு சட்டம் (திருத்த மசோதா) 2006 செல்லத்தக்கதல்ல என்று தக்க சட்ட ஆதாரங்களுடன் வாதிட்டோம்.

அதற்கு நேர் மாறாக கேரள அரசு தனது அத்தகைய சட்டம் இயற்ற அதிகாரம் உண்டு என்றும், உரிமை உண்டு என்றும் வாதிட்டது.இந்த வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு, இதற்கொரு நடுவர் மன்றம் அமைக்கலாமா என்ற ஆலோசனையை தெரிவித்தது. அதை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்தது. ஆனால் கேரள அரசு அதனை வரவேற்றது.

இந்நிலையில் உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் முடிவெடுப்பதற்கு வசதியாக அரசயில் சாசனம் 131-வது பிரிவின் கீழ் 5 பேர் கொண்ட குழுவினை நீதியரசர் ஆனந்த் தலைமையிலே அமைத்துள்ளது.இந்தக் குழு அணை பாதுகாப்பு மற்றும் நீர்மட்ட உயரம் முதலி யவைகளைப் பரிசீலனை செய்து அதன் அறிக்கையை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்விற்கு ஆறு மாத காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம்தான் தெரிவித் திருக்கிறது.

இந்த நிலையில் தமிழக அரசு எதையும் விட்டுக் கொடுத்து விடவில்லை. கேரள அரசுக்கு சாதகமாக எந்தவிதமான முடிவும் வந்து விடவில்லை. அதற்குள் சில அவசரக்காரர்கள் ஏதோ தமிழக அரசு ஏமாந்து விட்டது. விட்டுக் கொடுத்து விட்டது என்றெல்லாம் கூறுவது அரசியல் பிரச்சாரமே தவிர வேறல்ல.

கே: தேசிய ஆதி திராவிடர் ஆணையத்தின் துணைத் தலைவர் திமுக அரசின் மீது திடீர் பாய்ச்சல் நடத்திருப்பது ஏன்?

கருணாநிதி: புறம் கூறுவது ஒன்றையே வேலையாக வைத்துக் கொண்டு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர், அருந்ததியர் முன்னேற் றத்திற்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஓரிருவர் ஒழுங்கு முறையோடு செயல்படவில்லை என்பதற்காக நடவடிக்கைக்கு ஆளாகக் கூடும் என்ற நடுக்கத்தில பிதற்றியதை நம்பி பேசியிருக்கிறார் போலும் இந்தத் துணை ஆணையர் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+